செவ்வாய், செப்டம்பர் 09, 2014

பம்பரம்

   பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒருவிளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டும் ஆகும். பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டை கொண்டு சுழற்றி விடும்போதுவளைவுந்த விசையினால் நிலைத்திருந்து சுழல முடிகிறது. சுழலும்போது காற்றுமண்டலத்துடன் ஏற்படும் உராய்வினால் இந்த விசையின் தாக்கம் குறையும்போது முதலில் அச்சு திசைமாறி கடைசியாக நிலைதடுமாறி விழுகிறது. பம்பரம்உலகின் பல பகுதிகளிலும் விளையாடப்படுகிறது.


திங்கள், செப்டம்பர் 08, 2014

எழுத்தறிவு



      அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. 
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

ஞாயிறு, செப்டம்பர் 07, 2014

தமிழ்ர் விளையாட்டு ஜல்லிக்கட்டு

                      இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

வியாழன், செப்டம்பர் 04, 2014

சேவல்சண்டை வரலாறு

              தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த இந்த தமிழ்மண்ணில் 16ஆம் நூற்றாண்டில் இந்த சேவல் சண்டை மிகவும் பிரபலம் அடைந்தது. போர் இல்லாத நேரங்களில் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருக்க இந்த சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. சேவல்சண்டையின் போது சேவல்களின் கால்களில் கத்தியை கட்டிவிட்டு அவற்றை மோதவிட்டு போர் வீரர்கள் பொழுதுபோக்கினர். இவ்வாறு சேவல்சண்டையிடும் களம் ‘சாவக்கட்டு’ என்று இன்றளவும் தமிழகத்தின் பல ஊர்களில் மருவி  அழைக்கப்படுகிறது.